Pages

நினைக்கும்பொழுதெல்லாம் நிசப்தமாய்

இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



கண்கள் சந்தித்ததால் காதல் வந்தது

கேள்விப்பட்டிருக்கிறேன் ..........

மோதல் வந்ததால் காதல் வந்தது

அறிந்திருக்கிறேன்................

நாமோ......

காதலைக் கற்றுக்கொண்டது

வார்த்தைவிளையாட்டாலல்லவா
தோழி......



இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



தொலைப்பேசியில்......

மௌனத்திற்கு சில நிமிடம்...

மோகத்திற்கு சில நிமிடம்...

சண்டைக்கு சில நிமிடம்...

சமாதானத்திற்கு சில நிமிடம்...

சந்தோசத்திற்குசில நிமிடம்...

முத்தமழைபொழிய சில நிமிடம்...



இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



முதல்சந்திப்பில்...........

..


கண்கள் சந்தித்தபோது......

கலக்கமான சலனம் ஏனோ?

பயணப்பொழுதுகளிலெல்லாம்.......

அனுபவசாலியாய் பழகினாய்.....

அலைக்கழிக்காமல் அரும்பினாய்.....

அருகிலமர்ந்து அனுபவித்தேனடி தோழி..


எட்டுமணிநேரமும்.............

எட்டு நிமிடமானதடி தோழி.



இரண்டு வருட அனுபவம் ...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம் நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...

No comments:

Post a Comment